Bureau of Rehabilitation

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

சுயமாக புனர்வாழ்வை கோருபவர்களுக்கான புனர்வாழ்வு நிலையம்

அறிமுகம்

2023 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க புனர்வாழ்வுப் பணியகச் சட்டத்தின் 4 (அ) பிரிவின்படி, புனர்வாழ்வைக் கோரும் நபர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும் கடமையையும் பணியையும் நிறைவேற்ற புனர்வாழ்வுப் பணியகம் கடமைப்பட்டுள்ளது.
இதனை கருத்திற்கொண்டு அதன் முதற்கட்டமாக , நவோதாவ மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி எழுத்தறிவுப் பயிற்சி மையத்தில் (சேனபுர), சுயமாகப் புனர்வாழ்வைக் கோரும் நபர்களின் முதல் குழுவினருக்கான புனர்வாழ்வுச் செயல்முறை 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

  • 18-60 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்
  • நீடித்த நோய் மற்றும் அங்கவீனமற்றவராக இருத்தல் வேண்டும்.
  • பாதுகாவலர் எழுத்து மூலமாக விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.
  • புனர்வாழ்வு பெற விரும்புவர் எழுத்துமூலமாக தனது விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.
  • வதிவிடத்தை உறுதி செய்வதற்கான கிராம சேவகரின் சான்றிதழ்
  • கடுமையான குற்றச்செயல்களுடன் தொடர்புபடாத அல்லது அத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு உட்படாதவர்களாக இருக்க வேண்டும்.
  • புனர்வாழ்வு காலத்தில் வழக்குகளுக்கு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த படாதவராக இருத்தல் வேண்டும்
  • NDDCB இனால் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைத் திட்டம்
  • உளவளத்துணை (தனிநபர் / குழு)
  • யோகா பயிற்சி
  • ஆன்மீக நிகழ்ச்சிகள்
  • தலைமைத்துவ பயிற்சி
  • சமயம் சார்ந்த விழாக்கள் மற்றும் விசேட தினங்களை அனுஷ்டிக்கும் நிகழ்ச்சிகள்
  • மருத்துவ சிகிச்சை
  • முதலுதவி பயிற்சி
  • அனர்த்த முகாமைத்துவம்
  • மருத்துவ சிகிச்சை
  • விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகள்

மேலதிக வசதிகள்

  • உணவு மற்றும் பானங்கள்: (நிலையத்தில் தற்போது நடைமுறையிலுள்ள முறைமையின்படி உணவு வழங்க எதிர்பார்க்கப்படுகிறது).
  • அன்றாடத் தேவைகளுக்கான உடைகள்: (உதாரணமாக: டி-ஷர்ட், வெள்ளை சட்டைகள், கருப்பு காற்சட்டைகள், உடற்பயிற்சி ஆடைகள், Bottom, கருப்பு நிற Belt, உள்ளாடைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், சாரங்கள், துண்டுகள், ரப்பர் செருப்புகள், கன்வஸ் காலணிகள், காலுறைகள், தொப்பிகள், பனியன்கள்).
  • அன்றாடத் தேவைகளுக்கான பொருட்கள்: (உதாரணமாக: சவர்க்காரம், பற்பசை, பற்தூரிகை, ரேசர், தலையணைகள், நுளம்புவலைகள், சவர்க்கார பெட்டிகள், ஹேங்கர்ஸ், கோப்பைகள்)
  • புனர்வாழ்விற்காக அனுமதிக்கப்படுபவர்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்காக எந்தவொரு பொருட்களையும் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை.

 

 

 

  • நிலையத்தில் ஒரு சேவை பெறுநரை ஒப்படைக்கும்போது, அவரது பாதுகாவலர் கட்டாயம் வருகை தருதல் வேண்டும்.
  • அவர் தாமாகவே முன்வந்து ஒப்படைக்கப்படுவதாகப் பாதுகாவலரிடமிருந்து கையொப்பம் பெற்று, ஒப்படைப்பு/பெறுதல் கடிதம் ஒன்று நிலையத்தினால் தயாரிக்கப்படுதல் வேண்டும்.
  • அவர்களின் முகவரி மற்றும் அருகிலுள்ள பொலிஸ் நிலையம், அவசர நிலைமைகளின் போது தகவல் தெரிவிக்க வேண்டிய நபர்கள் குறித்த விபரங்கள் என்பன நிலையத்தில் கடமையில் உள்ள பொலிஸ் அதிகாரிகளால் தனியாகப் பதியப்படுதல் வேண்டும்.
  • சேவை பெறுநர்கள் நிலையத்திற்கு வரும்போது அவர்களிடம் உள்ள தொலைபேசி (Mobile phones), தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் ஏனைய பொருட்கள் பாதுகாவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
  • தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களைப் பொறுப்பேற்கும்போது, அந்த மொழிகளைப் பேசக்கூடிய ஆலோசகர்களின் உதவியைப் பெற வேண்டும்.
  • நிலையத்திற்கு வரும் சேவை பெறுநர்களுக்கு ஏதேனும் விஷேட சுகாதார தேவைகள் ஒவ்வாமைகள் ​ இருந்தால், அது குறித்த விபரங்கள் அவர்களிடம் இருந்து பெறப்பட வேண்டும்.
  • நிலையத்திற்கு வந்த 20 நாட்களுக்குப் பிறகு (அவசர நிலை தவிர), அவர்கள் தமது வீடுகளுக்கு முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளவும், அவர்களுடன் தொடர்பு கொள்ளவும் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். அதன்பிறகு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை மற்றும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வீடுகளுக்குத் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும்.
  • 03 மாத புனர்வாழ்வுக் காலப்பகுதி முடிவில், அவரைப் பொறுப்பேற்க ஒரு பாதுகாவலர் கட்டாயம் வர வேண்டும்.
  •  

சுயமாக புனர்வாழ்வை கோரும் நபர்களுக்கான விண்ணப்பப் படிவம்

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவலாம்?

நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ள விரும்பினால், புனர்வாழ்வு தொடர்பான எந்தவொரு விசாரணைகளுக்கும் புனர்வாழ்வு பணியகம் உங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளது.