Bureau of Rehabilitation

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

சுயமாக புனர்வாழ்வை கோருபவர்களுக்கான புனர்வாழ்வு நிலையம்

அறிமுகம்

2023 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க புனர்வாழ்வுப் பணியகச் சட்டத்தின் 4 (அ) பிரிவின்படி, புனர்வாழ்வைக் கோரும் நபர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும் கடமையையும் பணியையும் நிறைவேற்ற புனர்வாழ்வுப் பணியகம் கடமைப்பட்டுள்ளது.
இதனை கருத்திற்கொண்டு அதன் முதற்கட்டமாக நவோதாவ மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழில்வாண்மை எழுத்தறிவுப் பயிற்சி நிலையத்தில் (சேனபுர), சுயமாகப் புனர்வாழ்வைக் கோரும் நபர்களின் முதல் குழுவினருக்கான புனர்வாழ்வுச் செயல்முறை 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

  • 18-60 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்
  • நீடித்த நோய் மற்றும் அங்கவீனமற்றவராக இருத்தல் வேண்டும்.
  • பாதுகாவலர் எழுத்து மூலமாக விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.
  • புனர்வாழ்வு பெற விரும்புவர் எழுத்துமூலமாக தனது விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.
  • வதிவிடத்தை உறுதி செய்வதற்கான கிராம சேவகரின் சான்றிதழ்
  • கடுமையான குற்றச்செயல்களுடன் தொடர்புபடாத அல்லது அத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு உட்படாதவர்களாக இருக்க வேண்டும்.
  • புனர்வாழ்வு காலத்தில் வழக்குகளுக்கு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த படாதவராக இருத்தல் வேண்டும்
  • NDDCB இனால் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைத் திட்டம்
  • உளவளத்துணை (தனிநபர் / குழு)
  • யோகா பயிற்சி
  • ஆன்மீக நிகழ்ச்சிகள்
  • தலைமைத்துவ பயிற்சி
  • சமயம் சார்ந்த விழாக்கள் மற்றும் விசேட தினங்களை அனுஷ்டிக்கும் நிகழ்ச்சிகள்
  • மருத்துவ சிகிச்சை
  • முதலுதவி பயிற்சி
  • அனர்த்த முகாமைத்துவம்
  • மருத்துவ சிகிச்சை
  • விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகள்

மேலதிக வசதிகள்

  • உணவு மற்றும் பானங்கள்: (நிலையத்தில் தற்போது நடைமுறையிலுள்ள முறைமையின்படி உணவு வழங்க எதிர்பார்க்கப்படுகிறது).
  • அன்றாடத் தேவைகளுக்கான உடைகள்: (உதாரணமாக: டி-ஷர்ட், வெள்ளை சட்டைகள், கருப்பு காற்சட்டைகள், உடற்பயிற்சி ஆடைகள், Bottom, கருப்பு நிற Belt, உள்ளாடைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், சாரங்கள், துண்டுகள், ரப்பர் செருப்புகள், கன்வஸ் காலணிகள், காலுறைகள், தொப்பிகள், பனியன்கள்).
  • அன்றாடத் தேவைகளுக்கான பொருட்கள்: (உதாரணமாக: சவர்க்காரம், பற்பசை, பற்தூரிகை, ரேசர், தலையணைகள், நுளம்புவலைகள், சவர்க்கார பெட்டிகள், ஹேங்கர்ஸ், கோப்பைகள்)
  • புனர்வாழ்விற்காக அனுமதிக்கப்படுபவர்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்காக எந்தவொரு பொருட்களையும் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை.
    • பாதுகாவலரின் வருகை: ஒரு சேவை பெறுநரை நிலையத்திற்குப் பொறுப்பளிக்கும் போது, அவரது பாதுகாவலர் ஒருவர் கட்டாயமாக சமூகமளிக்க வேண்டும்.
    • எழுத்துமூல இணக்கம்: சேவை பெறுநர் தனது சுய விருப்பத்தின் பேரிலேயே சிகிச்சைக்கு உட்படுகின்றார் என்பதற்கான பொறுப்பளிப்பு கடிதத்தில் பாதுகாவலர் கையொப்பமிட வேண்டும்.
    • தகவல்களைப் பதிவு செய்தல்: உங்களது முகவரி, அருகிலுள்ள பொலிஸ் நிலையம் மற்றும் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டியவர்களின் விபரங்களை நிலையத்திற்குவழங்க வேண்டும்.
    • மொழி உதவி: தமிழ் அல்லது முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த சேவை பெறுநர்களுக்கு, அந்த மொழிகளைக் கையாளக்கூடிய ஆலோசகர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

    தனிப்பட்ட பொருட்கள் தொடர்பான விதிகள்

    • நிலையத்திற்கு அனுமதிக்கும் போது உங்களிடம் உள்ள கைபேசிகள், தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் ஏனைய பெறுமதியான பொருட்களை மீண்டும் உங்களது பாதுகாவலரிடமே ஒப்படைக்க வேண்டும். நிலையத்தினுள் அவற்றை வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

    சுகாதாரத் தகவல்கள்

    • சேவை பெறுநருக்கு ஏதேனும் உணவு அல்லது மருந்து வகைகள் தொடர்பாக ஒவ்வாமை (Allergies) காணப்படின், அனுமதிக்கும் சந்தர்ப்பத்தில் அது குறித்து அதிகாரிகளுக்குக் கட்டாயமாகத் தெரியப்படுத்த வேண்டும்.

    வீட்டுடன் தொடர்புகளைப் பேணுதல்

    • முதலாவது அழைப்பு: நிலையத்திற்கு வருகை தந்து 20 நாட்களின் பின்னரே முதலாவது தொலைபேசி அழைப்பை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும்.
    • மாதாந்த அழைப்புகள்: அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வார ஞாயிற்றுக்கிழமை மற்றும் இறுதி வார ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிற்கு அழைப்புகளை மேற்கொள்வதற்கான வசதிகள் செய்து தரப்படும்.
    • அவசர நிலைமை: ஏதேனும் அவசரத் தேவை ஏற்படின் தொடர்புகொள்வதற்காக, மேலதிக புனர்வாழ்வு அத்தியட்சகரின் தொலைபேசி இலக்கம் மாத்திரம் பாதுகாவலருக்கு வழங்கப்படும்.

    கால எல்லை மற்றும் வெளியேறுதல்

    • புனர்வாழ்வு காலம் 03 மாதங்களாகும். இக்காலம் முடிவடைந்ததும் சேவை பெறுநரை பொறுப்பேற்பதற்கு பாதுகாவலர் ஒருவர் கட்டாயமாக வருகை தர வேண்டும்.

சுயமாக புனர்வாழ்வை கோரும் நபர்களுக்கான விண்ணப்பப் படிவம்

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவலாம்?

நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ள விரும்பினால், புனர்வாழ்வு தொடர்பான எந்தவொரு விசாரணைகளுக்கும் புனர்வாழ்வு பணியகம் உங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளது.