திட்டமிடப்படும் விதம்:
அபாயகரமான போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து பாடசாலை மாணவர்களைப் பாதுகாக்கும் நோக்கில், அங்கீகரிக்கப்பட்ட செயற்பாட்டுத் திட்டத்திற்கமைய, ஒரு காரியாலயத்தினால் மாதமொன்றுக்குக் குறைந்தது 02 விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம், தமது அதிகார எல்லைக்குட்பட்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், அதிபரின் அனுமதியுடன் இத்திட்டங்களை முன்னெடுக்கும். (இதற்காக அதிபரினால் மாகாணக் கல்வி அலுவலகத்திடமிருந்து அனுமதி பெறப்பட வேண்டும்). மேலும், இதில் பங்குபற்றும் மாணவர்களுக்குச் சிற்றுண்டிகளும் வழங்கப்படும்.
இத்திட்டங்களுக்காக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் மாவட்ட போதைப்பொருள் கல்வி உதவியாளர்கள் மற்றும் பிரதேச வைத்தியசாலையின் மனநலப் பிரிவைச் சேர்ந்த வைத்தியர்களின் வளப் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்படும்.
இதன் நோக்கங்கள்:
திட்டமிடப்படும் விதம்:
இதன் நோக்கங்கள்:
திட்டமிடப்படும் விதம்:
விழிப்புணர்வுத் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும் விதம்:
போதைப்பொருள் என்பது ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கின்ற ஒரு காரணியாகக் காணப்படுவதால், சமூகத்தினரிடையே அதன் பரவலைத் தடுக்கும் நோக்கில் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைப்புடன் கிராம மட்டம் முதல் நகர மட்டம் வரை விழிப்புணர்வுத் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதற்கமைய, முதற்கட்டமாக பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களுக்கு அரச அதிகாரிகள் விழிப்புணர்வுத் திட்டத்தின் கீழ் தெளிவுபடுத்தப்படும். அதனைத் தொடர்ந்து, அத்தகைய உத்தியோகத்தர்களினால் விழிப்புணர்வுத் திட்டங்கள் அவசியமான பிரதேசங்கள் இனங்காணப்பட்டு, பொதுமக்களை ஒன்றிணைத்து அத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்பு வழங்கப்படும்.
இதன் நோக்கங்கள்:
தனிப்பட்ட மற்றும் குடும்ப ஆலோசனை நிகழ்ச்சித்திட்டங்கள்
திட்டமிடப்படும் விதம்:
இதன் நோக்கங்கள்:
உடல், உள சுகாதார சிக்கல்களை தீர்த்துக் கொள்ள வழிகாட்டல்
பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக் ஆலோசனை மற்றும் புரிந்துணர்வு மூலம் சிக்கல்களை தீர்த்துக் கொள்ள உதவுதல்
• சமூக விரோத செயற்பாடுகளிலிருந்து விடுபட உதவுதல்.
• தனிப்பட்ட வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்புவதற்கு உதவுதல்.
• தனிப்பட்ட திறமைகளை மேம்படுத்திக் கொள்ள உதவுதல்.
•ஆளொருவருக்கு சமூகத்தில் அங்கீகாரத்தை ஏற்படுத்தல் மற்றும் நல்லதொரு பயன்வாய்ந்த பிரசையாக சமூகத்தில் இணைப்பதற்கான சூழலை உருவாக்குதல்.
திட்டமிடப்படும் விதம்:
முதல் தடவை போதைவஸ்துப் பயன்படுத்தியுள்ளவர்கள் மற்றும் புனர்வாழ்வின் பின்னர் மீண்டும் பொதைவஸ்துப் பயன்பாட்டில் ஈடுபடுபவர்களை இலக்காகக் கொண்டு இந்த நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. இதன் போது தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஒழிப்பு மற்றும் பயிற்சிப் பிரிவின் பயிற்சி அலுவலர்கள் மற்றும் வெளிப்புற சேவைகள் துறையைச் சேர்ந்த வெளி அலுவலர்களின் உதவி மற்றும் ஆற்றல்களின் அடிப்படையில் போதைவஸ்து பயன்படுத்தி புனர்வாழ்வு பெற்ற பின்னர் நல்ல பிரசைகளாக சமூகமயப்படுத்தப்பட்டுள்ள ஆட்களை வளவாளர்களாக பயன்படுத்திக் கொள்ளும் வாய்;ப்புக்களும் உள்ளன. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஒழுங்கு செய்வதன் நோக்கங்கள் பின்வருமாறாகும்.
இத்திட்டங்கள் மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயங்களினால் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இதற்கான விரிவுரைகள் மற்றும் பயிற்சிகளை தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் விழிப்புணர்வு கல்வி மற்றும் பயிற்சிப் பிரிவின் அலுவலர்கள் முன்னெடுப்பர்.
நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ள விரும்பினால், புனர்வாழ்வு தொடர்பான எந்தவொரு விசாரணைகளுக்கும் புனர்வாழ்வு பணியகம் உங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளது.