Bureau of Rehabilitation

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

வேலை வாய்ப்புகள்

விண்ணப்பிக்கும் முறை

புனர்வாழ்வு பணியகத்தினால் (Bureau of Rehabilitation) பின்வரும் வெற்றிடங்களுக்காக தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் தமக்குரிய சந்தர்ப்பங்களில் நிகழ்நிலை (Online) முறைமையின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், தேவையேற்படின் நேரில் சமர்ப்பிப்பதற்காக (PDF) வடிவிலான விண்ணப்பப்படிவத்தையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிகழ்நிலையில் விண்ணப்பிக்கவும்

விளம்பரப்படுத்தப்பட்டுள்ள எந்தவொரு வெற்றிடத்திற்கும் பொதுவான நிகழ்நிலை விண்ணப்பப்படிவத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன், தொடர்புடைய பதவியை சரியாகத் தெரிவு செய்து, தேவையான அனைத்து தகவல்களையும் துல்லியமாகப் பூர்த்தி செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அச்சிடப்பட்ட விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பிக்கவும்

கையால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், (PDF) விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனைத் தெளிவாகப் பூர்த்தி செய்து, தொடர்புடைய பதவிக்கான அறிவுறுத்தல்களுக்கு அமைவாக சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு முன்னர் தயவுசெய்து பின்வரும் அறிவுறுத்தல்களைக் கவனத்திற் கொள்ளவும்:

  • நீங்கள் விண்ணப்பப் படிவத்தை நிகழ்நிலை (Online) ஊடாக மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும்.
  • விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன், நீங்கள் விண்ணப்பிக்க எதிர்பார்க்கும் பதவிக்குரிய இங்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை நன்கு வாசித்துப் புரிந்து கொண்ட பின்னர் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.
  • நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், ஒவ்வொரு பதவிக்குமாகத் தனித்தனியான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
  • விண்ணப்பப்படிவத்தை ஆங்கில மொழியில் (English) மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும். (உங்கள் வசதிக்காக விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவுறுத்தல்கள் சிங்களம்/ஆங்கிலம்/தமிழ் ஆகிய மொழிகளில் வழங்கப்பட்டுள்ளன).
  • முதலில் உங்கள் விண்ணப்பதாரர் வகையை (Applicant Type) சரியாகத் தெரிவு செய்ய வேண்டும் (ஒன்றை மட்டும் தெரிவு செய்யவும்).
  • Internal Applicant: தற்போது புனர்வாழ்வுப் பணியகத்தில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்கள் மட்டுமே இதற்குச் சொந்தமானவர்கள்.
  • External Applicant: ஏனைய அனைத்து விண்ணப்பதாரர்களும் வெளிவாரி விண்ணப்பதாரர்களாவர்.
  • இரண்டாவதாக, ஆட்சேர்ப்புப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், நீங்கள் தோற்ற விரும்பும் மொழியைச் சரியாகத் தெரிவு செய்யவும் (ஒரு மொழியை மட்டுமே கோர முடியும்). விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த (Submit) பின்னர் எக்காரணம் கொண்டும் மொழி மாற்றப்பட மாட்டாது.
  • மூன்றாவதாக, விண்ணப்பப் படிவத்தின் இலக்கம் 1 முதல் 10 வரையிலான தகவல்களைச் சரியாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • 'Application for the Post of' என்பதற்கு நேரே நீங்கள் விண்ணப்பிக்கும் பதவியைத் குறிப்பிட வேண்டும் (அதற்காக ஆங்கில அறிவித்தலை பயன்படுத்தவும்).
  • பரீட்சை அனுமதி அட்டை / நேர்முகத் தேர்வுக்கான கடிதங்கள் இலக்கம் 6 இல் நீங்கள் குறிப்பிடும் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.
  • புனர்வாழ்வுப் பணியகத்தின் நிரந்தர ஊழியர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை (பரீட்சைக் கட்டணம் செலுத்த வேண்டிய பதவிகளுக்கு மாத்திரம்).
  • ஏனைய அனைத்து வெளிவாரி விண்ணப்பதாரர்களும் ரூ. 500/- விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்துவது கட்டாயமாகும்.
  • நீங்கள் பல பதவிகளுக்கு விண்ணப்பித்தால், ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
  • எந்தவொரு இலங்கை வங்கி (Bank of Ceylon) கிளையிலும், "புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகம்" (Bureau of Commissioner General of Rehabilitation) பெயரில், பொரளை சுப்பர் கிரேடு கிளையின் (Borella Super Grade Branch) கணக்கு இலக்கம்: 0007042763 இற்கு வைப்புச் செய்ய வேண்டும். (நிகழ்நிலை (Online) அல்லது CDMA மூலமாகவும் மேற்படி கணக்கிற்குச் செலுத்தலாம்).
  • பணம் செலுத்திய பற்றுச்சீட்டின் (Deposit Slip) ஒரு பிரதியை உங்களிடம் வைத்துக்கொண்டு, அதன் மூலப் பிரதியின் (Original) மேல் பகுதியில் நீல நிறப் பேனாவைப் பயன்படுத்தி நீங்கள் விண்ணப்பிக்கும் பதவியைத் தெளிவான எழுத்துக்களில் எழுதி, அதனை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
  • செலுத்தப்பட்ட விண்ணப்பக் கட்டணம் எக்காரணம் கொண்டும் மீள வழங்கப்பட மாட்டாது.
  • விண்ணப்பத்தின் 31 ஆம் பகுதியை பூர்த்தி செய்யும் போது:
    • Bank Name: நீங்கள் பணம் செலுத்திய வங்கியின் பெயர்.
    • Branch: பணம் செலுத்திய வங்கி கிளை.
    • Account Number: ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியிருந்தால் அந்த கணக்கு இலக்கம். (CDMA அல்லது வங்கி வைப்பு என்றால் ஸ்லிப் இலக்கத்தை இடவும்).
    • Transaction ID / Reference No: நிகழ்நிலை (Online) அல்லது வங்கி மூலம் பணம் செலுத்திய அச்சிடப்பட்ட இலக்கம் அல்லது CDMA இலக்கத்தைப் பதிவிடவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை “Submit Application” பயன்படுத்திச் சமர்ப்பித்த பின்னர், அதன் பிரதியைத் தரவிறக்கம் (Download) செய்து, வன் பிரதியுடன் (Hard Copy) பணம் செலுத்திய பற்றுச்சீட்டின் மூலப் பிரதியை இணைக்க வேண்டும்.
  • சமர்ப்பித்த பிறகு எந்த மாற்றமும் செய்ய முடியாது. தரவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் அத்தகைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • அரசுத் திணைக்களங்கள்/கூட்டுத்தாபனங்கள்/கூட்டிணைக்கப்பட்ட சபைகளில் பணிபுரிபவர்கள் தமது நிறுவனத் தலைவரின் அனுமதியுடன் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
  • விண்ணப்பத்தில் வழங்கப்பட்ட தகவல்கள் உண்மையானவை என உறுதிப்படுத்தி கையொப்பமிட வேண்டும். தவறான தகவல்கள் கண்டறியப்பட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் அல்லது வேலையிலிருந்து நீக்கப்படும்.
  • கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியைத் தெளிவாகக் குறிப்பிட்டு, சான்றிதழ்களின் பிரதிகள் மற்றும் தரவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை இணைத்து பதிவுத் தபாலில் “புனர்வாழ்வுப் பணியகம் (Bureau of Rehabilitation), இல: 462/2, கடுவெல வீதி, கனஹேன, பத்தரமுல்ல.” என்ற முகவரிக்கு இறுதித் திகதிக்கு முன்னர் அனுப்பவும்:
  • மேலே குறிப்பிட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ள இங்கே CLICK HERE செய்யவும்
  • விண்ணப்படிவத்தினை பொறுப்பேற்கும் இறுதித் தினமன்று தகமைகளை பூர்த்திசெய்யாதுள்ள விண்ணப்படிவங்கள் / முழுமையாகப் பூரணப்படுத்தப்படாத விண்ணப்படிவங்கள் / பண வைப்பு பற்றுச் சீட்டின் மூல பிரதி இணைக்கப்படாத விண்ணப்பப் படிவங்கள் /பதிவிறக்கம் (Dowload) செய்த விண்ணப்படிவங்களைத் தவிர அனுப்பப்பட்ட ஏனைய விண்ணபப்படிவங்கள் மற்றும் விண்ணப்பப்படிவம் ஏற்றுக் கொள்ளும் இறுதித் திகதியிற்குப் பின்னர் கிடைக்கும் விண்ணப்படிவங்கள் நிராகரிக்கப்படும் / ஏதேனும் ஒரு காரணத்தினால் நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
  • புனர்வாழ்வுப் பணியகத்தின் முடிவே இறுதியானது.

மேலதிக விபரங்களுக்கு: 0112883891 (Ext: 139)

தற்போதைய வெற்றிடங்கள்

தற்போது செயலில் உள்ள வெற்றிடங்கள் இல்லை.

உளவளத்துணையாளர் (புனர்வாழ்வு) - நிரந்தர/ஒப்பந்த

உதவி உளவளத்துணையாளர் (புனர்வாழ்வு) - நிரந்தர/ஒப்பந்த