போரின் முடிவில் வழிதவறிச்சென்ற முன்னாள் போராளிகள் 10790 பேர் ஒரே நேரத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல்,இலங்கைக்கு உரித்தான புனர்வாழ்வு செயல்முறை மூலம் நிலையான கொள்கைகளின்படி மிகக் குறுகிய காலத்தினுள் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டமையானது மாபெரும் வெற்றியாகும். வழிதவறிச் சென்ற முன்னாள் போராளிகளின் மனித உரிமைகளை உறுதி செய்வதற்கும், பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் சட்ட கட்டமைப்பை நிறுவுவதற்காக 2006ஆம் ஆண்டு செப்டெம்பர் 12 ஆம் திகதி 1462/08 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி, 18 வயதுக்கு குறைந்த வழிதவறிச் சென்ற சிறுவர் போராளிகளுக்காக 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதி 1580/05 ஆம் இலக்க அதி விஷேட வர்த்தமானி, 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி 1721/05 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.
2006.09.12 ஆம் திகதி 1492/9 ஆம் இலக்க அதி விஷேட வர்த்தமானி மூலம் நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் அவர்கள் முதலாவது புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார். பின்னர் மனிதாபிமான நடவடிக்கை மூலம் அரசாங்கத்திடம் சரணடையும் வழிதவறிச் சென்ற முன்னாள் போராளிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பைக் கருத்திற் கொண்டு அதற்கு ஏற்ற வகையில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக இலங்கை இராணுவத்தின் மேஜர் ஜெனரல் ப்ரிகேடியர் நிலையில் உள்ள சிரேஷ்ட அதிகாரியினை நியமித்து முப்படை பணிக்குழாத்தின் உதவியுடன் புனர்வாழ்வு செயல்முறை வெற்றிகரகமாக மேற்கொள்ளப்பட்டது. 24 நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்ட புனர்வாழ்வு செயல்முறை தற்போது வழிதவறிச் சென்ற போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் செயற்பாடு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. 2012.12.31 ஆம் திகதி முன்னாள் போராளிகள் 12196 பேர் வெற்றிகரமாக நிறைவு செய்து நற்பிரஜையாக சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர்.
நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ள விரும்பினால், புனர்வாழ்வு தொடர்பான எந்தவொரு விசாரணைகளுக்கும் புனர்வாழ்வு பணியகம் உங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளது.