நீதிமன்ற உத்தரவுகளின் கீழ் புனர்வாழ்விற்காகப் பரிந்துரைக்கப்படும் வழிதவறிச் சென்ற முன்னாள் போராளிகள் மற்றும் அபாயகரமான ஔடதங்களுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகம் 2023 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் “புனர்வாழ்வு பணியகம்” என்ற பெயரில் கூட்டிணைக்கப்பட்ட சபை தாபிக்கப்பட்டுள்ளது. இப்பணியகம் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கிவருகின்றது.
2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க ஒளடதங்களில் தங்கியுள்ள ஆட்கள் (சிகிச்சையளித்தலும், புனர்வாழ்வளித்தலும்) பற்றிய சட்டத்திற்கு அமைய சிகிச்சையளித்தல் மற்றும் புனர் வாழ்வளித்தலை கோருகின்ற அல்லது சிகிச்சை மற்றும் புனர்வாழ்வளித்தல் இப்பணியகத்தின் பிரதான பணியாகும். புனர்வாழ்வுப் பணியகத்தின் கீழ் நவோதாவ சிகிச்சையளித்தல் நிலையம், கந்தக்காடு, நவோதாவ மூன்றாம் நிலை மற்றும் தொழிற் கல்வி எழுத்தறிவு பயிற்சி நிலையம் – சேனபுர மற்றும் சாரங்கா நிலையம் – வவுனியா ஆகிய மூன்று (03) நிலையங்கள் இயங்கி வருகின்றன.
புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுகின்ற புனர்வாழ்வுபெறுநர்களுக்கு 06 மாதகாலங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்து ஒரு முறையான கால அட்டவணைக்கு அமைய, மனநல மருத்துவர்கள், உளவளத்துணையாளர்கள், வெளிவாரி தொழில்வாண்மை அதிகாரிகள் மற்றும் தொழிற்பயிற்சி ஆலோசகர்கள் ஆகியோரின் பங்களிப்புடன்;
மறுவாழ்வுத் திட்டம் முடிந்ததும், மறுவாழ்வு பெற்றவர்கள் நடைமுறை திறன்கள், சமூக விழிப்புணர்வு மற்றும் நாட்டிற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்கான அறிவு ஆகியவற்றைக் கொண்ட பொறுப்புள்ள, களங்கப்படுத்தப்படாத நபர்களாக சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்படுகிறார்கள்.
புனர்வாழ்விற்கு அனுப்பி வைக்கப்படும் புனர்வாழ்வுபெறுநர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்து, ஒரு முறையான கால அட்டவணையின்படி 06 மாத கால புனர்வாழ்வு நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட மனநல மருத்துவர்கள், உளவளத்துணையாளர்கள், தகுதியுள்ள வெளிவாரி தொழில்முறை உத்தியோகத்தர்கள் மற்றும் வளவாளர்களின் பங்கேற்புடன் உடல், உள, ஆரோக்கியம் மற்றும் ஆன்மீக மேம்பாட்டுத் திட்டங்கள் இக்காலப்பகுதியில் நடாத்தப்படும். இவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துவதன் மூலம், பல்வேறு உடல் மற்றும் உள ரீதியான குழப்பங்களால் பாதிக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு பெறுநர்களின் உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களிடையே நல்விருப்பு மற்றும் நேர்மறையான சிந்தனைகளை உருவாக்குவதற்கும், அபாயகரமான போதைப்பொருட்களிலிருந்து அவர்களை விடுவித்து சமூகத்திற்குப் பயனுள்ள நபர்களாக மாற்றுவதற்கும் இது பெரிதும் உதவியாக அமைந்துள்ளது.
நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ள விரும்பினால், புனர்வாழ்வு தொடர்பான எந்தவொரு விசாரணைகளுக்கும் புனர்வாழ்வு பணியகம் உங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளது.