தற்போதைய அரசாங்கத்தின் நச்சுப் போதைப்பொருட்களை இல்லாதொழிக்கும் தேசிய செயற்திட்டத்திற்கு இணைவாக அபாயகர ஔடதம் எனும் ஆபத்தான போதைப்பொருட்களுக்கு அடிமையாகி தமது வாழ்வினை இருளாக்கிய இளைஞர்களின் வாழ்விற்கு ஒளியூட்டும் பொருட்டு தமது வாழ்வினை மீண்டும் நல்வழிப்படுத்திக் கொள்ளும் நோக்குடன் புனர்வாழ்வைக் கோருகின்றவர்களுக்கு முதலாவது தன்னார்வ புனர்வாழ்வு நிலையம் புனர்வாழ்வுப் பணியகத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் வசந்தா சுபசிங்க அவர்களினதும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ப்ரிகேடியர் எம் எஸ் அமித் அவர்களினதும் அழைப்பின் பேரில் 2025.10.16ஆம் திகதி இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன அவர்களினால் நீதி மற்றும் ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார அவர்கள், வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதியமைச்சர் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் T.B. சரத் அவர்கள், பொலன்னறுவை பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சுனில் ரத்னசிறி மற்றும் கௌரவ பத்மசிறி பண்டார அவர்கள், பொலன்னறுவை மாவட்ட செயலாளர் E.M.D.S. ஏக்கநாயக்க அவர்கள், வெலிகந்தை பிரதேச செயலாளர் T.M. இர்பான் அவர்கள், கிழக்கு பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் JSBW பல்லேகும்புர அவர்களின் பங்குபற்றுதலுடன் மனப்பாங்கு மற்றும் திறன்கள் அபிவிருத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இதில் சுயமாக முன்வந்து புனர்வாழ்வுக்கு உட்படுபவர்களுக்கு உணவு, தங்குமிட வசதிகள் மற்றும் அனைத்து வசதிகளும் அரசாங்கத்தால் இலவசமாக வழங்கி வைக்கப்படுவதோடு, மூன்று மாத கால புனர்வாழ்விற்கு பின்னர் இவர்கள் சமூகமயப்படுத்தப்படுவார்கள்.
இந் நிகழ்விற்குப் பின்னர் கௌரவ சபாநாயகர் மற்றும் சிறப்பு விருந்தினரகள் சேனபுர நவோதாவ சிகிச்சை நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டனர். பின்னர் நிலையத்தின் எதிர்கால நடவடிக்கை குறித்து கலந்துரையாடப்பட்டது.