Bureau of Rehabilitation

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

உளவளத்துணையாளர்களுக்கான இரண்டாவது பயிற்சிப் பட்டறை - காலி மாவட்டம்

போதைப்பொருள் ஒழிப்புக்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் கீழ் உளவளத்துணையாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை – காலி மாவட்டம்

தற்போதைய அரசாங்கத்தின் “முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் ஒழிப்பு தேசிய செயற்திட்டத்திற்கு நேரடியாகப் பங்களிப்பினை வழங்கி வரும் புனர்வாழ்வுப் பணியகத்தின் புனர்வாழ்வு செயற்பாடு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நடவடிக்கைகளுக்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நேரடித் தலையீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கும், அவர்களை ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கும் தேவையின் அடிப்படையில் உளவளத்துணையாளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் இரண்டாவது பயிற்சிப்பட்டறை காலி மாவட்டத்தை இலக்காகக் கொண்டு 21.01.2026 ஆம் திகதி காலி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வானது புனர்வாழ்வு பணியகத்தின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் வசந்தா சுபசிங்க, காலி மாவட்ட செயலாளர். W.A. தர்மசிறி, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ப்ரிகேடியர் M.S. அமித் உட்பட காலி மாவட்ட அரச அதிகாரிகள், அதிதிகள் மற்றும் காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல உளவளத்துணையாளர்களின் பங்குபற்றுதலுடன் இனிதே ஆரம்பமானது.

போதைப்பொருள் அற்ற சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான அறிவைப் பகிர்ந்து கொள்ளுதல், ஒருங்கிணைப்பு வலையமைப்பொன்றை உருவாக்குதல் மற்றும் புனர்வாழ்வு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்களை வலுப்படுத்துதல் ஆகியன இதன் முக்கிய நோக்கங்களாகும்.