தற்போதைய அரசாங்கத்தின் போதைப்பொருளினை ஒழிக்கும் செயற்பாட்டிற்கு நேரடி பங்களிப்பினை வழங்கி வரும் புனர்வாழ்வுப் பணியகத்தின் புனர்வாழ்வு செயற்பாடு மற்றும் போதைப்பொருளினை இல்லாதொழிப்பதற்கும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நேரடி தலையீடுகளை பெற்றுக் கொள்வதற்கும் அவர்களை ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கும் தேவையின் அடிப்படையில் உளவளத்துணையாளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் முதலாவது பயிற்சி பட்டறை கம்பஹா மாவட்டத்தினை இலக்காகக் கொண்டு 2025.10.14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வானது நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அவர்களின் தலைமையில் சமய மற்றும் கலாசார அலுவலர்கள் பிரதி அமைச்சர் எம் எம் மொஹம்மட் முனீர் அவர்கள், கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி யூ.பீ அபேவிக்ரம அவர்கள், கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாப்பளகம அவர்கள், புனர்வாழ்வு பணிகயத்தின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் யூ.கே. வசந்தா சுபசிங்ஹ அவர்கள், அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தலைவர் வைத்தியர் இந்திக வன்னிநாயக்க மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ப்ரிகேடியர் எம்எஸ் அமித் அவர்களினதும் உளவளத்துணயாளர்களினதும் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.