ஒளடதங்களுக்கு அடிமையான ஆட்களாக மாறியுள்ள ஆட்கள் மற்றும் வேறு ஏதேனும் சட்டத்தின் அடிப்படையில் இனங்காணப்படக்கூடிய வேறு யாராயினும் ஆட்களுக்கு புனர்வாழ்வளிப்பதை முறைப்படுத்துவதன் அவசியத்தன்மை மற்றும் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு இது கடும் சிக்கலொன்றாக மற்றும் தேசிய பிரச்சினையாக மாறியுள்ளதனால் அவ்வாறான ஆட்களுக்கு புனர்வாழ்வளித்து நல்வழிப்படுத்த வேண்டியதன் அவசியத்தன்மை பற்றிக் கவனம் செலுத்தி அப்பணியை நிறைவேற்றுவதற்காக 2023 இன் 2 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் ‘புனர்வாழ்வுப் பணியகம்’ என்ற பெயரில் கூட்டிணைக்கப்பட்ட சபை தாபிக்கப்பட்டுள்ளது. இப்பணியகம் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கிவருகின்றது.
2007 இன் 54 ஆம் இலக்க ஒளடதங்களில் தங்கியுள்;ள ஆட்கள் (சிகிச்சையளித்தலும், புனர்வாழ்வளித்தலும்) பற்றிய சட்டத்திற்கு அமைய சிகிச்சையளித்தல் மற்றும் புனர் வாழ்வளித்தலை கோருகின்ற அல்லது சிகிச்கை மற்றும் புனர்வாழ்வளித்தல் வழங்கப்பட வேண்டும் என்று அச்சட்டத்தினால் விதித்துரைக்கப்பட்டுள்ள போதைவஸ்துக்களுக்கு அடிமையான ஆட்களை அரவணைப்புச் செய்தல் மற்றும் புனர்வாழ்வளிப்பதற்காக புனர்வாழ்வளிப்பு பணியகத்தின் கீழ் மூன்று (03) நிலையங்கள் இயங்கிவருகின்றன.
நவோதாவ சிகிச்சையளித்தல் நிலையம், கந்தக்காடு, நவோதாவ மூன்றாம் நிலை மற்றும் தொழிற் கல்வி எழுத்தறிவு பயிற்சி நிலையம் – சேனபுர மற்றும் சாரங்கா நிலையம் – வவுனியா ஆகிய மேற்படி நிலையங்களில் 06 மாதகால புனர்வாழ்வுக் காலஎல்லையின் கீழ் ஒளடதங்களுக்கு அடிமையான ஆட்களை அரவணைப்புச் செய்தல் மற்றும் புனர்வாழ்வளிப்பது இடம்பெறுகின்றது
ஆகிய மேற்படி நிலையங்களில் 06 மாதகால புனர்வாழ்வுக் காலஎல்லையின் கீழ் ஒளடதங்களுக்கு அடிமையான ஆட்களை அரவணைப்புச் செய்தல் மற்றும் புனர்வாழ்வளிப்பது இடம்பெறுகின்றது
இவ்வாறு வெற்றிகரமான புனர்வாழ்வுச் செயன்முறையின் பின்னர் சமூகமயப்படுத்தப்படுகின்ற ஆட்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தத் தேவையான வழிகாட்டல்கள் மற்றும் நலன்புரி நடவடிக்கைகளை செய்துகொடுத்தல் மற்றும் அவர்கள் தொடர்பில் பின்னாய்வை மேற்கொள்வதை நோக்காகக் கொண்டு சகல மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களின் பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்புக் காரியாலயங்கள் பதின்மூன்று (13) இப்பணியகத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளன. மேலும் போதைவஸ்து ஒழிப்பு பற்றிய அறிவு மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களும் ஒழுங்கு செய்யப்படுகின்றன.
புனர்வாழ்வு பணியகம் மற்றும் அதன் கீழ் இயங்கிவருகின்ற புனர்வாழ்வு நிலையங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பணிகளை திட்டமிட்டு மற்றும் உபாயமுறையிலான கொள்கைகளுக்கு அமைய மென்மேலும் வினைத்திறன்மிக்கதாக நிறைவேற்றி வருவதன் பெறுபேறாக 2024 ஆம் ஆண்டில் ISO 9001 : 2015 தரச்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை எமது பணியகம் பெற்றுக் கொண்ட விசேட வெற்றியாகும்.
தரமான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வளிப்புச் செயன்முறை ஊடாக ‘ஆரோக்கியமான உள்ளம் புத்துணர்ச்சிமிக்க நாடு’ எனும் எமது பணியகத்தின் தொணிப்பொருளை யதார்த்தமாக்கிக் கொள்வதற்காக சமூகமயப்படுத்தப்படுகின்ற புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களின் ஆற்றல்களை நாட்டின் தேசிய ஊழியப்படைக்கு பங்களிப்புச் செய்துகொள்ள நடவடிக்கை மேற்கொள்வது ஒரே நோக்கமாகும்.