2026 ஆம் ஆண்டு வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, புனர்வாழ்வுப் பணியகத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ். அமித் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பணியகத்தில் பணிபுரிபவர்களினால் 2026 மே 27 அன்று பத்தரமுல்ல, கொரபே, ஸ்ரீ விஜய சுமனாராமய விகாரையில் தர்ம போதனையும் மதிய அன்னதான நிகழ்வும் நடாத்தப்பட்டன.
வணக்கத்திற்குரிய உபய விகாராதிபதி கொராம்பே சோமானந்த தேரரினால் தர்ம போதனை நிகழ்த்தப்பட்டதுடன், 32 வகையான கறிகளுடனான புத்த பூஜையும், மூன்று மகா சங்கத்தினருக்கான (நாயக்க தேரர்கள்) மதிய அன்னதானமும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மேலதிக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் (பதில்) அவர்கள், புனர்வாழ்வுப் பணியகத்தின் ஆணையாளர் (நிர்வாகம்) அவர்கள் உள்ளிட்ட புனர்வாழ்வுப் பணியக தலைமையகத்தின் அனைத்துப் பணியாளர்களும் கலந்துகொண்டனர்.