Bureau of Rehabilitation

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

மாவட்ட உளவளத்துணையாளர் குழாமைத் தாபிக்கும் நிகழ்ச்சித் திட்டம் - யாழ் மாவட்டம்

மாவட்ட உளவளத்துணையாளர் குழாமைத் தாபிக்கும் நிகழ்ச்சித் திட்டம் – யாழ் மாவட்டம்

இப்பணியகத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு அலுவலகங்கள் ஊடாக முன்னாய்வு மற்றும் பின்னாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அவசியமான உளவளத்துணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உளவளத்துணையாளர்கள் இன்மை காரணமாக அச்செயற்பாட்டின் வெற்றியில் காணப்படுகின்ற தடைகளை நிவர்த்தித்துக் கொள்ளும் அடிப்படை நோக்கத்துடன், மாவட்ட உளவளத்துணையாளர் குழாம் தாபிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் மற்றுமொரு நிகழ்ச்சித் திட்டம் யாழ் மாவட்டத்தை மையப்படுத்தி 2026.09.15 அன்று யாழ் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

புனர்வாழ்வுப் பணியகத்தின் தலைவர் முதுநிலை பேராசிரியர் வசந்தா சுபசிங்ஹ அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சித் தொடரானது, யாழ் மேலதிக மாவட்டச் செயலாளர் திரு. கே. சிவகரன் அவர்களின் தலைமையில், மேலதிக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் பிரசன்ன பிரியலால், சிரேஷ்ட உளவளத்துணையாளரும் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் செயற்குழு உறுப்பினருமான எம்.எம்.ஜி.எம்.பி. ரஷாத் உள்ளிட்ட புனர்வாழ்வுப் பணியகத்தின் அதிகாரிகள் மற்றும் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உளவளத்துணையாளர்களின் பங்குபற்றுதலுடன் நடாத்தப்பட்டது.

இக்குழாமில் தெரிவு செய்யப்படும் உளவளத்துணையாளர்களின் வளப் பங்களிப்பானது முன்னாய்வு மற்றும் பின்னாய்வு செயற்பாடுகளுக்காகப் பெற்றுக்கொள்ளப்படுவதுடன், அதற்காக பங்களிப்பு வழங்குமாறு யாழ் மேலதிக மாவட்டச் செயலாளர் திரு. கே. சிவகரன் அவர்களாலும், மேலதிக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் பிரசன்ன பிரியலால் அவர்களாலும் தங்களது உரையின் போது வலியுறுத்தப்பட்டது.
இதற்கமைய, புனர்வாழ்வளிக்கப்பட்ட நபர் என்பவர் யார்? அவரது மனநிலையை இனங்காணுதல், புனர்வாழ்வுபெறுநர்கள் நிலையத்தினுள் இருக்கும் காலப்பகுதியில் சிதைவடைந்த குடும்பக் கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்கும், புனர்வாழ்வுபெறுநர் பற்றிய நேர்மறையான எண்ணங்களைக் குடும்பத்தினுள் தோற்றுவிப்பதன் ஊடாக அவசியமான பின்னணியை உருவாக்குவதற்கும், புனர்வாழ்வு பெறுபவர் சமூகமயப்படுத்தப்பட்ட பின்னரும் குறித்த குடும்பச் சூழலில் சிறந்த உறவுகளைப் பேணிச் செல்வதற்கும், மீண்டும் போதைப்பொருளுக்கு அடிமையாவதைத் தவிர்ப்பதற்கும் அவசியமான உளவளத்துணையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, உளவளத்துணை பற்றிய சிறப்புரை ஒன்றை சிரேஷ்ட உளவளத்துணையாளரும் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் செயற்குழு உறுப்பினருமான எம்.எம்.ஜி.எம்.பி. ரஷாத் அவர்கள் வழங்கினார்.

மேலும், புனர்வாழ்வு பெறுபவர்களின் மனநிலை மற்றும் உளவளத்துணையின்போது அவர்களுடன் நேரடியாகச் செயற்படும்போது அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.