ரடம எகட” (முழு நாடுமே ஒன்றாக) தேசியப் பணியின் கீழ், பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில், சமூக மட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடமாடும் சேவை வேலைத்திட்டமொன்று மட்டக்குளி ஸ்ரீ விக்ரமபுர மைதானத்தில் பிரதி அமைச்சர் கௌரவ சுனில் வடகல தலைமையில் 2026.07.18 அன்று நடைபெற்றது.
ஆரோக்கியமான சமூக மாற்றத்தை இலக்காகக் கொண்ட இம்முகாமில், இலவச மருத்துவ உதவிகள், ஆயுர்வேத சிகிச்சைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதன் போது விசேட அங்கமாக அமைந்த புனர்வாழ்வுப் பணியகத்தின் கண்காட்சிக் கூடத்தின் ஊடாக, சுயவிருப்பின் பேரில் புனர்வாழ்வு பெறும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஊட்டப்பட்டு, அதற்கான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் புனர்வாழ்வுப் பணியகத்தின் மேலதிக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ப்ரிகேடியர் பிரசன்ன பிரியலால், உதவி ஆணையாளர் (புனர்வாழ்வு) லெப்டினன் கேர்ணல் உபுல் ஹேரத் மற்றும் கொழும்பு தெற்கு புனர்வாழ்வு உத்தியோகத்தர் லெப்டினன்ட் கேர்ணல் ஓ.வி.எஸ்.ஐ.ஆர்.கே. வித்தானகே உள்ளிட்ட புனர்வாழ்வுப் பணியகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.