Bureau of Rehabilitation

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

உளவளத்துணையாளர்கள் மற்றும் உளவளத்துணை ஆசிரியர்களுக்கான தேசிய மட்டத்திலான விழிப்புணர்வு நிகழ்ச்சி – கண்டி மாவட்டம்

உளவளத்துணையாளர்கள் மற்றும் உளவளத்துணை ஆசிரியர்களுக்கான தேசிய மட்டத்திலான விழிப்புணர்வு நிகழ்ச்சி – இரத்தினபுரி மாவட்டம்

தற்போதைய அரசாங்கத்தின் “முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் ஒழிப்பு தேசிய செயற்திட்டத்திற்கு நேரடிப் பங்களிப்பினை வழங்கிவரும் புனர்வாழ்வுப் பணியகத்தின் புனர்வாழ்வு செயற்பாடு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நடவடிக்கைகளுக்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நேரடித் தலையீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கும், அவற்றை ஒரே வலையமைப்பின் கீழ் ஒருங்கிணைக்கும் தேசிய அவசியத்தின் அடிப்படையில், உளவளத்துணையாளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் தேசிய வேலைத்திட்டத்தின் மற்றுமொரு அங்கமாக, இரத்தினபுரி மாவட்டத்தை இலக்காகக் கொண்டு 2026.10.02 அன்று இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இரத்தினபுரி மாவட்ட செயலாளர் எம்.ஜி. லலித் ஆனந்த அவர்களின் தலைமையில், மேலதிக மாவட்ட செயலாளர் அமில சுரஞ்சித் விஜேரத்ன, பிரதேச செயலாளர்கள், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ். அமித், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னாள் தலைவர், போதைப்பொருள் ஒழிப்பு தேசிய செயற்பாட்டு சபையின் உறுப்பினர் மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதி அறிவியல் திணைக்களப் பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சானக உதய குமார, மேலதிக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் பிரசன்ன பிரியலால், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் (I) / உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டீ.எம்.ஜே.கே. தஹனக்க, குருவிட்ட சிறைச்சாலை அத்தியட்சகர் உதய குமார, இரத்தினபுரி மாவட்ட புனர்வாழ்வு உத்தியோகத்தர் கே.டி.எம். பத்ம கீர்த்தி, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் சானிகா அபேசிங்க உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்களின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.

பங்குபற்றியவர்களை வரவேற்று உரையாற்றிய புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், போதைப்பொருளுக்கு அடிமையான இளைய சமூகத்தினரை அதிலிருந்து மீட்பதே புனர்வாழ்வு பணியகத்தின் நோக்கமாகும் எனவும், அதற்காக இத்திட்டத்தின் பங்களிப்பும் முக்கியத்துவமும் குறித்தும் குறிப்பிட்டதுடன், போதைப்பொருளற்ற நாட்டை உருவாக்குதல், இளம் சந்ததியினரை போதைப்பொருளிலிருந்து விடுவிப்பதற்கான தேசிய அவசியம் மற்றும் புனர்வாழ்வு பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய பணியின் முக்கியத்துவம் குறித்தும் மாவட்ட செயலாளர் மேலும் வலியுறுத்தினார்.

போதைப்பொருள் தொடர்பான கட்டுக்கதைகள், மனநிலை மற்றும் அடிமைத்தனம், விலகல் அறிகுறிகள் (Withdrawal symptoms), போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு ஆலோசனை வழங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள், உளவியல் ஆலோசனை மற்றும் தொழில்சார் ஆலோசனை, போதைப்பொருள் குறித்த ஆர்வத்தைத் தூண்டுவதில் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடகங்களின் பங்களிப்பு, பல்வேறு சிகிச்சை முறைகள் மற்றும் அவற்றின் தாக்கம் போன்ற விடயங்கள் குறித்து இந்நிகழ்ச்சியின் முக்கிய உரையாற்றுகைக்கு இணைந்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னாள் தலைவர், போதைப்பொருள் ஒழிப்பு தேசிய செயற்பாட்டு சபையின் உறுப்பினர் மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதி அறிவியல் திணைக்களப் பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சானக உதய குமார மிகத் தெளிவான விளக்கத்தினை அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் என்றால் என்ன, போதைப்பொருட்களின் வகைகள், இளைஞர் யுவதிகளிடையே போதைப்பொருள் பரவுதல், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் வர்த்தகம் தொடர்பான சட்ட நிலைமைகள், போதைப்பொருள் பயன்பாட்டினால் சமூகத்திற்கு ஏற்படும் தீங்குகள் மற்றும் அதன் ஆபத்தான பக்கங்கள் குறித்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் (I) / உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டீ.எம்.ஜே.கே. தஹனக்க கருத்தாழமிக்க உரையொன்றை நிகழ்த்தினார்.

நிகழ்வின் இறுதி அம்சமாக மேலதிக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் பிரசன்ன பிரியலால், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சானக உதய குமார, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டீ.எம்.ஜே.கே. தஹனக்க, குருவிட்ட சிறைச்சாலை அத்தியட்சகர் உதய குமார மற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் சானிகா அபேசிங்க ஆகியோரின் தலைமையில், கலந்துகொண்ட உளவளத்துணையாளர்களுடன் தற்கால போதைப்பொருள் நிலைமை குறித்த துறைசார் நிபுணர் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.