Bureau of Rehabilitation

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

இரத்தினபுரி மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு கரியாலயம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது

இரத்தினபுரி மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு கரியாலயம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது

புனர்வாழ்வு பணியகத்தின் 14 ஆவது மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு காரியாலயம், 02.02.2026 ஆம் திகதி  இரத்தினபுரி மாவட்ட செயலாளர் திரு. K. G. S. நிஷாந்த மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ப்ரிகேடியர் M. S. அமித் ஆகியோரின் தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இரத்தினபுரி மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி B. T. G. I. கருணாரத்ன, கணக்காளர், மாவட்ட பொறியியலாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், இரத்தினபுரி மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு காரியாலயத்தின் புனர்வாழ்வு உத்தியோகத்தர் கர்னல் G. A. D. I. S சமரநாயக்க, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தயானி சானிகா உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

புனர்வாழ்வு பணியகத்தினால் முன்னெடுக்கப்படும் புனர்வாழ்வு செயல்முறையை சமூக மட்டத்தில் விரிவுபடுத்துவதும், புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்களின் பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்தை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இந்த புதிய அலுவலகத்தின் முக்கிய நோக்கமாகும்.