Bureau of Rehabilitation

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள்

திட்டமிடப்படும் விதம்:

  • அபாயகரமான போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து பாடசாலை மாணவர்களைப் பாதுகாக்கும் நோக்கில், அங்கீகரிக்கப்பட்ட செயற்பாட்டுத் திட்டத்திற்கமைய, ஒரு காரியாலயத்தினால் மாதமொன்றுக்குக் குறைந்தது 02 விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கமைய, மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம், தமது அதிகார எல்லைக்குட்பட்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், அதிபரின் அனுமதியுடன் இத்திட்டங்களை முன்னெடுக்கும். (இதற்காக அதிபரினால் மாகாணக் கல்வி அலுவலகத்திடமிருந்து அனுமதி பெறப்பட வேண்டும்). மேலும், இதில் பங்குபற்றும் மாணவர்களுக்குச் சிற்றுண்டிகளும் வழங்கப்படும்.

    இத்திட்டங்களுக்காக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் மாவட்ட போதைப்பொருள் கல்வி உதவியாளர்கள் மற்றும் பிரதேச வைத்தியசாலையின் மனநலப் பிரிவைச் சேர்ந்த வைத்தியர்களின் வளப் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்படும்.

இதன் நோக்கங்கள்:

  •  நல்ல மனப்பாங்கு, திறன்களை விருத்தி செய்தல்.
  • எதிர்மறையான நடத்தைகள் மற்றும் உணர்வுகளை நிராகரிப்பதற்கான ஆற்றலை வளர்த்தல்
  • சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப அறிவைப் பயன்படுத்துவது பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்துதல்
  • குறிப்பிட்ட விடயப்பரப்பு தொடர்பாகச் சிறுவர்களிடமுள்ள தவறான கருத்துக்களைக் களைந்து, அவர்களின் எண்ணங்களை ஆராய்தல்
  • போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீய விளைவுகளைப் தெளிவுபடுத்துதல்
  • சிறுவர்கள் ஊடாகக் குடும்பங்களுக்குள் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுச் செய்தியைக் கொண்டு சேர்த்தல்.
  • போதைப்பொருள் பயன்பாட்டினால் மனித உடலில் ஏற்படும் விஞ்ஞான ரீதியான உடல்சார் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
  • வர்த்தக விளம்பரங்களுக்கு ஏமாறாமல், போதைப்பொருட்களின் உண்மையான ஆபத்துக்களைப் புரிந்துகொள்ளச் செய்தல்.

திட்டமிடப்படும் விதம்:

  • போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து விலகி இருத்தல், பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் போதைப்பொருள் பரவுவதைத் தடுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந் நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன்போது, அரச நிறுவனத் தலைவர்களின் எழுத்துமூலமான கோரிக்கையின் பேரில், திகதி மற்றும் நேரம் ஒதுக்கப்பட்டு, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வளப் பங்களிப்புடன் இவை நடத்தப்படும்.

இதன் நோக்கங்கள்:

  • புனர்வாழ்வு பெறுவோரிடையே மீண்டும் போதைப்பொருள் பயன்பாடு ஏற்படுவதைத் தடுத்தல் மற்றும் அதன் பரவலைக் குறைத்தல்
  • புனர்வாழ்வுச் செயன்முறைகள் குறித்துச் சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் பங்களிப்பை உறுதிசெய்தல்.
  • போதைக்கு அடிமையானவர்களை மீள இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்துத் தெளிவுபடுத்துதல்.
  • போதையற்ற ஆரோக்கியமான இளைய சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்
  • அரச சேவையின் வினைத்திறனையும் நம்பிக்கையையும் பாதுகாத்தல்.
  • அரச அதிகாரிகளின் பங்களிப்புடன் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை விரிவுபடுத்துதல்
  • கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டங்களை முறையான வடிவில் ஏற்பாடு செய்தல்
  • தலைமையகங்களினால் புனர்வாழ்வு பெறுவோருக்காக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, நிறுவனங்களுக்கிடையே பரஸ்பர விரிவான புரிதலைப் பேணுதல்.

திட்டமிடப்படும் விதம்:

  • போதைப்பொருள் பரவலானது ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் ஒரு பிரதான காரணியாக இருப்பதால், அதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் கிராம மற்றும் கள உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைப்புடன் கிராம மட்டம் முதல் நகர மட்டம் வரை இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் முதற்கட்டமாக அரச அதிகாரிகள் விழிப்புணர்வூட்டப்படுவதுடன், அதனைத் தொடர்ந்து அவர்களினால் அடையாளம் காணப்படும் பிரதேசங்களில் உள்ள பொதுமக்களை ஒருங்கிணைத்து விழிப்புணர்வுத் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.

விழிப்புணர்வுத் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும் விதம்:

போதைப்பொருள் என்பது ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கின்ற ஒரு காரணியாகக் காணப்படுவதால், சமூகத்தினரிடையே அதன் பரவலைத் தடுக்கும் நோக்கில் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைப்புடன் கிராம மட்டம் முதல் நகர மட்டம் வரை விழிப்புணர்வுத் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதற்கமைய, முதற்கட்டமாக பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களுக்கு அரச அதிகாரிகள் விழிப்புணர்வுத் திட்டத்தின் கீழ் தெளிவுபடுத்தப்படும். அதனைத் தொடர்ந்து, அத்தகைய உத்தியோகத்தர்களினால் விழிப்புணர்வுத் திட்டங்கள் அவசியமான பிரதேசங்கள் இனங்காணப்பட்டு, பொதுமக்களை ஒன்றிணைத்து அத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்பு வழங்கப்படும்.

இதன் நோக்கங்கள்:

  • போதைப்பொருள் புனர்வாழ்வு பெறுவோரிடையே போதைப்பொருள் பயன்பாடு மேலும் பரவுவதைக் குறைத்தல்.
  • புனர்வாழ்வுச் செயன்முறை குறித்துச் சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டல்.
  • புனர்வாழ்வுச் செயன்முறையை விளக்குதல் மற்றும் புனர்வாழ்விற்காகச் சேர்த்துக்கொள்ளும் நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வூட்டல்.
  • புனர்வாழ்வு பெற்று சமூகமயப்படுத்தப்பட்டவர்களைப் பராமரித்தல் மற்றும் அவர்களை மீண்டும் சரியான முறையில் சமூகத்துடன் ஒன்றிணைக்கும் விதம் குறித்துத் தெளிவுபடுத்தல்.
  • சந்தைப்படுத்தல் விளம்பரங்களின் மாயையில் சிக்கிக் கொள்வதைக் குறைத்தல்.
  • குடும்பக் கட்டமைப்பு மற்றும் குடும்ப முன்னேற்றம் குறித்துச் சிந்திக்கத் தூண்டுதல்.
  • போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பொருளாதார, சமூக மற்றும் உடல் ரீதியான தீய விளைவுகளைச் சுட்டிக்காட்டுதல்.
  • போதைப்பொருளை முதன்முறை பயன்படுத்திய உடனேயே அதிலிருந்து மீள்வதற்குத் தேவையான சரியான வழிமுறைகளை விளக்குதல்.
  • சிதைந்த குடும்பங்களுக்கு ஆலோசனை வழங்கல் மற்றும் அது சார்ந்த நிறுவனங்களுக்கு ஆற்றுப்படுத்துதல்.

தனிப்பட்ட மற்றும் குடும்ப ஆலோசனை நிகழ்ச்சித்திட்டங்கள்

திட்டமிடப்படும் விதம்:

  • போதைவஸ்துப் பயன்பாட்டின் காரணமாக புனர்வாழ்வு பெற்று சமூகமயப்படுத்தப்பட்டவர்கள் அல்லது போதைவஸ்துப் பயன்பாட்டுள்ளவர்களின் தனிப்பட்ட அல்லது குடும்பத்தில் எழுந்துள்ள சிக்கலான நிலைமைகளை குறைத்துக் கொள்ளல் / தடுத்துக் கொள்வதற்காக இந்த நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை நடவடிக்கைகள் மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு அலுவலகங்களுக்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ள ஆலோசனை அலுவலர்களினால் மேற்கொள்ளப்படுவதுனட், அவ்வாறு இல்லாத அலுவலகங்களில் ஆலோசனை நிகழ்ச்சித்திட்டங்களுக்கு சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் சேவையாற்றி வருகின்ற சிரேஷ்ட உளவியல் ஆலோசகர்கள் மற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு  சபையின் மாவட்ட உளவளத்துணையாளர்களின் உதவி பெற்றுக் கொள்ளப்படுகின்றது. மேலும் இந்த நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கு செய்வதன் நோக்கங்கள் பின்வருமாறாகும்.

இதன் நோக்கங்கள்:

  • உடல், உள சுகாதார சிக்கல்களை தீர்த்துக் கொள்ள வழிகாட்டல்

  • பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக் ஆலோசனை மற்றும் புரிந்துணர்வு மூலம் சிக்கல்களை தீர்த்துக் கொள்ள உதவுதல்
    • சமூக விரோத செயற்பாடுகளிலிருந்து விடுபட உதவுதல்.
    • தனிப்பட்ட வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்புவதற்கு உதவுதல்.
    • தனிப்பட்ட திறமைகளை மேம்படுத்திக் கொள்ள உதவுதல்.
    •ஆளொருவருக்கு சமூகத்தில் அங்கீகாரத்தை ஏற்படுத்தல் மற்றும் நல்லதொரு பயன்வாய்ந்த பிரசையாக சமூகத்தில் இணைப்பதற்கான சூழலை உருவாக்குதல்.

திட்டமிடப்படும் விதம்:

முதல் தடவை போதைவஸ்துப் பயன்படுத்தியுள்ளவர்கள் மற்றும் புனர்வாழ்வின் பின்னர் மீண்டும் பொதைவஸ்துப் பயன்பாட்டில் ஈடுபடுபவர்களை இலக்காகக் கொண்டு இந்த நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. இதன் போது தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஒழிப்பு மற்றும் பயிற்சிப் பிரிவின் பயிற்சி அலுவலர்கள் மற்றும் வெளிப்புற சேவைகள் துறையைச் சேர்ந்த வெளி அலுவலர்களின் உதவி மற்றும் ஆற்றல்களின் அடிப்படையில் போதைவஸ்து பயன்படுத்தி புனர்வாழ்வு பெற்ற பின்னர் நல்ல பிரசைகளாக சமூகமயப்படுத்தப்பட்டுள்ள ஆட்களை வளவாளர்களாக பயன்படுத்திக் கொள்ளும் வாய்;ப்புக்களும் உள்ளன. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஒழுங்கு செய்வதன் நோக்கங்கள் பின்வருமாறாகும்.

  • மீண்டும் சமூக விரோத நடவடிக்கைகளில் சிக்குவதிலிருந்து தடுத்தல்.
    • நல்லதொரு குடும்ப அமைப்பைக் கட்டியெழுப்புதல்.
    • போதைவஸ்துக்களுக்கு அடிமையான ஆட்களின் குடும்ப உறுப்பினர்களும் அதில் சிக்குவதைத் தடுத்தல்.
    • போதைவஸ்துப் பயன்பாட்டின் விளைவுகள் பற்றி சமூகத்தை விழிப்புணர்வூட்டல்.
    • எதிர்கால சந்ததியினருக்கு முன்மாதிரியான மற்றும் பாதுகாப்பான சமூக சூழலை உருவாக்கிக் கொடுத்தல்.
    • புனர்வாழ்வில் ஈடுபடுத்தல் உட்பட வேறு சிகிச்சைமுறைகளில் ஈடுபடுத்தல்.
    • போதைவஸ்து பயன்பாட்டுக்கு எதிராக சட்டரீதியான சட்டகம் பற்றி விழிப்புணர்வூட்டல்.

இத்திட்டங்கள் மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயங்களினால் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இதற்கான விரிவுரைகள் மற்றும் பயிற்சிகளை தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் விழிப்புணர்வு கல்வி மற்றும் பயிற்சிப் பிரிவின் அலுவலர்கள் முன்னெடுப்பர்.

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவலாம்?

நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ள விரும்பினால், புனர்வாழ்வு தொடர்பான எந்தவொரு விசாரணைகளுக்கும் புனர்வாழ்வு பணியகம் உங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளது.