Bureau of Rehabilitation

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

போதைக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு

மேலோட்டம் மற்றும் செயல்பாடுகள்

நீதிமன்ற உத்தரவுகளின் கீழ் புனர்வாழ்விற்காகப் பரிந்துரைக்கப்படும் வழிதவறிச் சென்ற முன்னாள் போராளிகள் மற்றும் அபாயகரமான ஔடதங்களுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகம் 2023 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க  சட்டத்தின் கீழ் “புனர்வாழ்வுப் பணியகம்” என்ற பெயரில்  கூட்டிணைக்கப்பட்ட சபை தாபிக்கப்பட்டுள்ளது. இப்பணியகம் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கிவருகின்றது.

2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க ஒளடதங்களில் தங்கியுள்ள ஆட்கள் (சிகிச்சையளித்தலும், புனர்வாழ்வளித்தலும்) பற்றிய சட்டத்திற்கு அமைய சிகிச்சையளித்தல் மற்றும் புனர் வாழ்வளித்தலை கோருகின்ற அல்லது சிகிச்சை மற்றும் புனர்வாழ்வளித்தல் இப்பணியகத்தின் பிரதான பணியாகும். புனர்வாழ்வுப் பணியகத்தின் கீழ் நவோதாவ சிகிச்சையளித்தல் நிலையம், கந்தக்காடு, நவோதாவ மூன்றாம் நிலை மற்றும் தொழிற் கல்வி எழுத்தறிவு பயிற்சி நிலையம் – சேனபுர மற்றும் சாரங்கா நிலையம் – வவுனியா ஆகிய மூன்று (03) நிலையங்கள் இயங்கி வருகின்றன.

  1. புனர்வாழ்வு பெறுவோர் அபாயகரமான ஒளடதங்களைப் பயன்படுத்துவதிலிருந்து தூரமாவதற்கு உதவுதல் மற்றும் உளவியல்சார் சிகிச்சை முறைகளின் ஊடாக நடத்தைசார் மாற்றத்திற்கு உட்படுத்தல்.
  2. அவர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சூழலை மாற்றியமைப்பதன் மூலம் அபாயகரமான ஒளடதங்களுக்கு அடிமையாவதிலிருந்து விடுவித்துக் கொள்ளல்.
  3. புனர்வாழ்வு பெறுவோருக்கு தொழில்வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ளக்கூடிய வகையில் தொழில்சார் அறிவைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் நிபுணத்துவம்மிக்க ஆட்களாக சமூகமயப்படுத்தல்
  4. குடும்பத்தை பலப்படுத்தல், அதன் முக்கியத்துவம், இருதரப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துதல் மற்றும் குடும்பத்தை பேணிவருவதற்குத் தேவையான பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி நடவடிக்கைகளை மேம்படுத்தல்.

 

புனர்வாழ்வுச் செயல்முறைக்காக உள்வாங்கப்படும் புனர்வாழ்வுபெறுநர்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் 06 மாத காலப்பகுதிக்குள் முழுமையாக நிறைவு செய்யப்படுகின்றன. முறையான கால அட்டவணையின் கீழ்; மனநல மருத்துவர்கள், உளவளத்துணையாளர்கள், வெளிவாரித் துறைசார் வல்லுநர்கள் மற்றும் தொழிற்பயிற்சி விரிவுரையாளர்களின் வழிகாட்டலில் பின்வரும் மேம்பாட்டுத் திட்டங்கள் முறைப்படி நடைமுறைப்படுத்தப்படுகின்றன;

  • உடல், உள, சுகாதார மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள்
  • விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
  • அத்துடன் தொழிற்பயிற்சி நிகழ்ச்சிகள் என்பன நடத்தப்படுகின்றன

இதன் மூலம், புனர்வாழ்வுச் செயல்முறையின் நிறைவில் சமூகமயப்படுத்தப்படும் இப் புனர்வாழ்வுபெறுநர்கள், சமூகத்தினால் புறக்கணிக்கப்படாத ஒரு நபராக மாத்திரமன்றி, சமுதாயத்திற்கு முன்மாதிரியானதொரு அத்தியாவசிய ஆளுமையாகவும், சமூகத்தில் வாழும் ஏனையோரை விடவும் பரந்த அறிவாற்றல் கொண்ட, தேசத்திற்குப் பயனுள்ள நற்பிரஜையாகவும் மீண்டும் சமூகமயப்படுத்தப்படுகின்றனர்.

புனர்வாழ்விற்கு அனுப்பி வைக்கப்படும் புனர்வாழ்வுபெறுநர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்து, ஒரு முறையான கால அட்டவணையின்படி 06 மாத கால புனர்வாழ்வு நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட மனநல மருத்துவர்கள், உளவளத்துணையாளர்கள், தகுதியுள்ள வெளிவாரி தொழில்முறை உத்தியோகத்தர்கள் மற்றும் வளவாளர்களின் பங்கேற்புடன் உடல், உள, ஆரோக்கியம் மற்றும் ஆன்மீக மேம்பாட்டுத் திட்டங்கள் இக்காலப்பகுதியில் நடாத்தப்படும். இவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துவதன் மூலம், பல்வேறு உடல் மற்றும் உள ரீதியான குழப்பங்களால் பாதிக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு பெறுநர்களின் உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களிடையே நல்விருப்பு மற்றும் நேர்மறையான சிந்தனைகளை உருவாக்குவதற்கும், அபாயகரமான போதைப்பொருட்களிலிருந்து அவர்களை விடுவித்து சமூகத்திற்குப் பயனுள்ள நபர்களாக மாற்றுவதற்கும் இது பெரிதும் உதவியாக அமைந்துள்ளது.

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவலாம்?

நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ள விரும்பினால், புனர்வாழ்வு தொடர்பான எந்தவொரு விசாரணைகளுக்கும் புனர்வாழ்வு பணியகம் உங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளது.