உளவளத்துணையாளர்கள் மற்றும் உளவளத்துணை ஆசிரியர்களுக்கான தேசிய மட்டத்திலான விழிப்புணர்வு நிகழ்ச்சி – கண்டி மாவட்டம்
தற்போதைய அரசாங்கத்தின் “முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் ஒழிப்பு தேசிய செயற்திட்டத்திற்கு நேரடிப் பங்களிப்பினை வழங்கிவரும் புனர்வாழ்வுப் பணியகத்தின் புனர்வாழ்வு செயற்பாடு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நடவடிக்கைகளுக்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நேரடித் தலையீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கும், அவற்றை ஒரே வலையமைப்பின் கீழ் ஒருங்கிணைக்கும் தேசிய அவசியத்தின் அடிப்படையில், உளவளத்துணையாளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் தேசிய வேலைத்திட்டத்தின் மற்றுமொரு அங்கமாக, கண்டி மாவட்டத்தை இலக்காகக் கொண்டு 2026.09.18 அன்று கண்டி மாவட்டச் செயலகத்தில் இந்நிகழ்வு நடாத்தப்பட்டது.
கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புனர்வாழ்வுப் பணியகத்தின் தலைவர் முதுநிலைப் பேராசிரியர் வசந்தா சுபசிங்க, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ். அமித், கண்டி மாநகர ஆணையாளர் இந்திகா குமாரி, மேலதிக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் பிரசன்ன பிரியலால், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அசோக தர்மசேன, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியதர்ஷினி பிரேமரத்ன, போகம்பறை சிறைச்சாலை அத்தியட்சகர் சம்பத் வர்ணகுலசூரிய உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் துறைசார் நிபுணர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மாவட்டச் செயலாளர், போதைப்பொருளற்ற நாட்டை உருவாக்குதல், மாவட்ட மட்டத்தில் இளைய தலைமுறையை போதைப்பொருளிலிருந்து பாதுகாத்து மீட்பதன் அவசியம் மற்றும் புனர்வாழ்வுப் பணியகம் ஆற்றிவரும் தேசியப் பணியின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.
புனர்வாழ்வுப் பணியகத்தின் தலைவர் தனது உரையில், இளைஞர் சமூகத்தை போதைப்பொருளிலிருந்து விடுவிக்கும் இந்த மாபெரும் பணிக்கு உளவளத்துணையாளர்களின் பங்களிப்பு எவ்வகையில் அவசியமாகிறது என்பது குறித்தும், மாவட்ட மட்டத்திலான இந்த வேலைத்திட்டங்களின் நோக்கங்கள் மற்றும் சமூக மட்டத்திலான புனர்வாழ்வின் அவசியத்தையும் விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும், இந்நிகழ்வில் கலந்துகொண்ட கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த உளவளத்துணையாளர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்களைத் தெளிவுபடுத்தும் முகமாக, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியதர்ஷினி பிரேமரத்ன அவர்களால், சமூகச் சூழலில் போதைப்பொருள் பரவுவதற்கான காரணங்கள் மற்றும் குடும்பம், பாடசாலை மற்றும் சமூகத்தின் பொறுப்புகள் குறித்து சமூகவியல் ரீதியான தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் என்றால் என்ன, அதன் வகைகள், இளைஞர் யுவதிகள் மத்தியில் போதைப்பொருள் பரவல், போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரத்துடன் தொடர்புடைய சட்ட நிலைமைகள், போதைப்பொருள் பாவனையினால் சமூகத்திற்கு ஏற்படும் பாரிய தீங்குகள் மற்றும் அதன் ஆபத்தான பக்கங்கள் குறித்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அசோக தர்மசேன அவர்களால் பயனுள்ள மற்றும் விழிப்புணர்வுமிக்க உரையொன்று நிகழ்த்தப்பட்டது.
நிகழ்வின் இறுதியாக, புனர்வாழ்வுப் பணியகத்தின் தலைவர், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், மேலதிக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மாஅதிபர், பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் மற்றும் சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோரின் பிரசன்னத்துடன், கலந்துகொண்ட உளவளத்துணையாளர்களுக்கான துறைசார் நிபுணர்களின் சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றது.